நியூசிலாந்து அணி மகுடம் சூடியது | தினகரன்


நியூசிலாந்து அணி மகுடம் சூடியது

பெண்களுக்கான உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி

பெண்களுக்காக உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.

இங்கிலாந்து லிவர்பூலில் இடமட்பெற்ற இந்த போட்டியில் உலக கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக நியூசிலாந்து அணி வெற்றியீட்டியது.

உலக தரவரிசையில் 4 ஆவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி 52-–51 எனும் புள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றியை ஈட்டியது.

அதுடன் மூன்றாவது இடத்தை போட்டிய நடத்திய இங்கிலாந்து அணி 58-–42 எனும் புள்ளி வித்தியாசத்தில்தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது.

2023 ஆண்டு உலக கிண்ண போட்டி தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ளது.

16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இலங்கை அணிக்கு 15ம் இடம் கிடைத்து. இங்கிலாந்தின் லிவர்பூலில் கடந்த 12ம் திகதி முதல் 21 ம் திகதி வரை இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.


Add new comment

Or log in with...