ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' | தினகரன்

ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்'

இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ராட்சசி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டில் பிசியாக உள்ள ஜோதிகா தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுதவிர எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜோதிகாவுன் நடிகை ரேவதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளனர்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.


Add new comment

Or log in with...