திரைப்படமாகும் முரளிதரனின் வாழ்க்கை: கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி | தினகரன்


திரைப்படமாகும் முரளிதரனின் வாழ்க்கை: கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்ன் உள்ளார்.

800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘800’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...