வீசா இன்றி தங்கியிருந்த இந்தியர் கைது | தினகரன்

வீசா இன்றி தங்கியிருந்த இந்தியர் கைது

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு விதிமுறைகளை மீறிய 27 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கண்டி சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  சந்தேகநபர் கண்டி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடம்வல சந்தியில் வைத்து நேற்று (22) பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 


Add new comment

Or log in with...