தோட்ட வைத்தியசாலைகள் ஒரே தரத்தில் மேம்படுத்தப்படும் | தினகரன்

தோட்ட வைத்தியசாலைகள் ஒரே தரத்தில் மேம்படுத்தப்படும்

மலையகத்திலுள்ள அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மாகாண சுகாதார அமைச்சர்களுடன் கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மலையகத்திலுள்ள அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் ஏற்கெனவே அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதேவேளை, அனைத்து அரச வைத்தியசாலைகளும் எந்தவித வேறுபாடின்றி ஒரே தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும், அவர் கூறினார்.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கு அவசியமான நிதியை அந்தந்த மாகாண சபைகளுக்கு அமைச்சு வழங்குமெனவும், தரமான சேவையை வழங்கும் பொருட்டு அனைத்து அரச வைத்தியசாலைகளும் எந்தவித வேறுபாடின்றி ஒரே தரத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வருடாந்த கூட்டத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.  

 

 


Add new comment

Or log in with...