வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை அங்கீகரிக்க உத்தரவு | தினகரன்


வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை அங்கீகரிக்க உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்று இலங்கை மருத்துவ சபையின் பரீட்சையில் சித்திபெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றிருந்த தம்மை இலங்கை மருத்துவ சபை பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன்காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...