மோதறையில் வீதி போக்குவரத்துக்கு மட்டுப்பாடு | தினகரன்

மோதறையில் வீதி போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

மோதறை, முத்துவெல்ல மாவத்தையின் புனித ஜேம்ஸ் சந்தியிலிருந்து டிலாசல் சந்தி வரையான வீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே, பொதுமக்கள் மற்றும் சாரதிகள்  மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள், முத்துவெல்ல மாவத்தை மற்றும் புனித ஜேம்ஸ் சந்தி ஊடாக இடதுபுறம் திரும்பி அளுத் மாவத்தை ஊடாகப் பயணிக்கலாம்.

கொழும்பிலிருந்து புறப்படும் வாகனங்கள், இப்பகேவத்த சந்தி ஊடாக அளுத் மாவத்தை வழியாக மாற்றுப் பாதைகளில் பயணிக்கலாமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...