கொழும்பு, புறநகர் பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு | தினகரன்


கொழும்பு, புறநகர் பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு-16 Hr Water Cut Colombo and Suburb

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 6 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோக குழாயில் திடீரென ஏற்பட்ட அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை  தெரிவித்துள்ளது.

இன்று (23) பி.ப. 6.00 மணி முதல் நாளை (24) மு.ப. 10.00 மணி வரை கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, நாராஹேன்பிட்டி, வெள்ளவத்தை (கொழும்பு 03, 04, 05, 06) மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

குறித்த கால இடைவெளியில் தெஹிவளை - கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்மலானை, சொய்சாபுர தொடர்மாடி தொகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...