ஸ்தம்பிதமடைந்த தபால் விநியோகம் ஆரம்பம் | தினகரன்

ஸ்தம்பிதமடைந்த தபால் விநியோகம் ஆரம்பம்

தபால் ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் தேங்கிக் கிடந்த சுமார் 06 இலட்சம் கடிதங்கள், இன்று (23) விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் தபால் ஊழியர்கள், மீண்டும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு, பின்னர் அப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுகவீன போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் 26,000 தபால் ஊழியர்கள் இணைந்திருந்ததாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.


Add new comment

Or log in with...