Friday, March 29, 2024
Home » வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதி மழை நிலை குறைவடைய வாய்ப்பு

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதி மழை நிலை குறைவடைய வாய்ப்பு

- சில பகுதிகளில் பல்வேறு தடவைகளில் மழை

by Rizwan Segu Mohideen
January 21, 2024 7:48 am 0 comment

– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இலங்கையின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (21) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT