திட்டமிட்ட தினத்தில் ஜனாதிபதி தேர்தல் | தினகரன்


திட்டமிட்ட தினத்தில் ஜனாதிபதி தேர்தல்

தேர்தல் செலவினங்களை நெறிப்படுத்த பிரசார நிதிச்சட்டம்

 வாக்குச் சீட்டில் 'நோட்டா' அறிமுகம்

 பதில் வேட்பாளர்கள் களமிறங்குவது தவறு

 தனிநபர் பெயரில் பொதுக்கட்டடம் வேண்டாம்

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் செலவீனங்களை நெறிப்படுத்தும் வகையில் பிரசார நிதிச் சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (22) தெரிவித்தார்.

ஒரு தேர்தலை நடத்துவதற்கு சுமார் 400 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் ஆகக்கூடியது இரண்டு மாத இடைவெளிக்குள் இரண்டு தேர்தல்களையும் நடத்த முடியுமாக இருந்தால் 600 கோடி ரூபாவே செலவாகுமென்றும் இதன்மூலம் சுமார் 200 கோடி ரூபாவை மீதப்படுத்தலாமென்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவதுபோல் அமெரிக்காவின் IFES உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் தேர்தல்கள் செயலகம் கட்டுப்படவில்லையென்றும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.

எதிர்காலங்களில் வாக்காளர் சீட்டுகளில் 'NOTA' எனும் வாசகம் பொறிக்கப்படாவிடில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடையுமென எச்சரித்த அவர், அரசியல் களத்தில் பதில் வேட்பாளர்கள் களமிறங்குவதை தேர்தல்கள் செயலகம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, உயிருடன் இருக்கும் அரசியல்வாதியொருவரின் பெயரில் பாடசாலைகள், கட்டடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படுவதனால் வாக்களிப்பு நிலையத்தின் பெயர் குறிப்பிடப்படும் பட்சத்தில் தேர்தல்கள் செயலகம் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 


Add new comment

Or log in with...