ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கே எமது ஆதரவு | தினகரன்


ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கே எமது ஆதரவு

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை விடயங்களுக்கு உத்தரவாதம் வழங்கும் எந்த நபர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கல்முனையில் நடை பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.  

தேர்தல்களை மையப்படுத்தி கல்முனை தொகுதி கட்சி தொண்டர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று முன்தினம் கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடை பெற்றது .

இந் நிகழ்வில் அகில இலங்கை மாக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட கல்முனை ,நற்பிட்டிமுனை ,மருதமுனை ,சாய்ந்தமருது கிராமங்களை சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் பேரினவாதம் சிறுபான்மையின மக்களை நசுக்கி அடக்கியொடுக்கி அடிமைத்தனமாக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றது .

பேரினவாத சக்திகளுக்கு துணை போகின்ற ஆட்சியாளர்களினால் சிறுபான்மையின மக்களை பாதுகாக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.  

எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கு எந்த வேட்பாளர் உத்தரவாதம் அளிப்பாரோ, முஸ்லிம் சமூகம் அந்த வேட்பாளரை ஆதரிப்பார்கள்  

இந்த விடயத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூக தலைவர்கள் இணக்கப்பாட்டு அரசியலுக்குள் ஒன்றுபட்டுள்ளனர்.

எமது தலைவர் றிசாத் பதியுதீன் சமூக பற்றுக்கொண்டவராக இன்று வெளிப்படுத்தப்படுள்ளார். 

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கு எமது தலைமைக்கு மேலும் மக்கள் பலத்தை வழங்கி அதிகாரமிக்கவராக மாற்ற அனைவரும் முன் வரவேண்டும் என்றார்.   

நற்பிட்டிமுனை விசேட நிருபர்    


Add new comment

Or log in with...