ஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம் | தினகரன்


ஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்

ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் செனகல் அணியை தோற்கடித்தது.

எகிப்தில், ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணம் நடைபெற்றது. தலைநகர் கெய்ரோவில் நடந்த இறுதிப் போட்டியில் செனகல், அல்ஜீரியா அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பத்தில் அல்ஜீரியா சோபித்தது. இரண்டாவது நிமிடத்தில் பாக்தாத் பவுன்ட்ஜா கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணி பதிலடி தராததால், அல்ஜீரியா 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் செனகல் வீரர்களின் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில், அல்ஜீரியா அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இரண்டாவது முறையாக (1990, 2019) கிண்ணத்தை வென்றது. செனகல் அணி 2002க்குப்பின், மீண்டும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.


Add new comment

Or log in with...