மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு | தினகரன்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது.

தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கிண்ண அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஓகஸ்டு 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து, ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகளில் போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...