Monday, July 22, 2019 - 10:50am
நபரொருவரை தாக்கியமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பெலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது கடந்த 18ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று தங்கல்ல நீதவான் நீதிமன்றத்தில் இவர் முன்னிலைப்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment