உலகத் தமிழர்கள் இணையம் மூலமும் சமூகவலைத்தளங்கள் மூலமும் தங்களுக்கு பிடித்தமான நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர் பாடகிகளை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் எடிசன் திரை விருதுகள் எதிர்வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரை துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் திரை கலைஞர்களை ஊக்குவித்து வரும் ‘எடிசன் திரை விருது’ வழங்கும் குழுவினர் இவ்வாண்டு மார்ச் மாதம் சென்னையில் எடிசன் தமிழ் திரை விருதுகளை வழங்கவுள்ளது.
இதற்கான தேர்வு பட்டியலை ஜனவரி 21 ஆம் திகதி முதல் இணையத்திலும், சமூக வலைதளத்திலும், edisonawards.in மற்றும் எடிசன் அவார்ட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து வாக்களிக்கும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்விருது தேர்வு பட்டியல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை திரையரங்குகள், OTT தளங்கள் மூலம் வெளியிடப்பட்ட தமிழ்த்திரைப்படங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முகம் தெரியாத உலகத் தமிழர்கள் தங்களுக்குப் பிடித்த திரைக்கலைஞர்களுக்கு பெப்ரவரி இறுதி வாரம் வரை வாக்களித்து தேர்வு செய்யும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும் வெளிநாடுகளிலுள்ள திரை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பின்னணி பாடகர் பாடகிகள், நடன கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமாரும் எடிசன் விருது குழு மற்றும் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் தீனாவும் இணைய மூலமாக நேர்காணல் கண்டனர். தொடர்புக்கு +60166167708 என்ற எண்ணில் வாட்ஸ் அப் செய்யலாம்.