ஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம் | தினகரன்


ஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானம்

1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கம் சட்டத்தின் கீழான பெண்கள்,இளைஞர் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தில் காணப்படும் ஆபத்தான தொழில் பட்டியலை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானியில் திருத்தங்களை ஏற்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

1956ஆம் ஆண்டு 45ஆம் இலக்க பெண்கள்,இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டளையில் 18 வயதுக்குக் குறைந்த இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 51 சந்தர்ப்பங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படுவது அடையாளங் காணப்பட்டுள்ளது. 

இருப்பினும் தற்பொழுது சேவை மேற்கொள்ளும் சுற்று வட்டம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றமடைந்துள்ளது. மேலும் சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடலியல், மன,நலம் மற்றும் நன்னடத்தை மேம்பாட்டுக்குத் தடையை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு 77 தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.  

இதற்கமைவாக 2019 ஆம் ஆண்டில் உத்தேச ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் கட்டளைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காரத்தைப்பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   


Add new comment

Or log in with...