பரீட்சை நிலைய பகுதிகள் டெங்கு நுளம்பற்ற பிரதேசமாக பிரகடனம் | தினகரன்


பரீட்சை நிலைய பகுதிகள் டெங்கு நுளம்பற்ற பிரதேசமாக பிரகடனம்

வைப்பக படம்

சிரமதானப் பணிகளும் முன்னெடுப்பு

க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நுளம்புகள் அற்ற பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நிலவும் மழையுடனான வானிலையால் டெங்குக் காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவ வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். 

நாட்டில் இதுவரை 29,000க்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிரமதானப் பணிகள், புகை விசிறும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

இதனைத் தவிர, எதிர்வரும் நாட்களில் க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நுளம்புகள் அற்ற பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட செயலகங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுமாறு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவினர் வைத்தியர் கூறினார்.   


Add new comment

Or log in with...