முஸ்லிம்களின் வாக்குகளின்றி ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்ய முடியாது | தினகரன்


முஸ்லிம்களின் வாக்குகளின்றி ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்ய முடியாது

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதே கடந்த தேர்தல்கால உண்மையான வரலாறு என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் அரசாங்கத்தினால் பி.எஸ்.டி.ஜி வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைவாக சுமார் 65 இலட்சம் செலவில் காத்தான்குடி தாருஸ்ஸலாம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் தாருஸ்ஸலாம் வட்டார நகர சபை உறுப்பினர் கே.எல்.பரீட் தலைமையில் நேற்று முன்தினம் (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று ஆரம்பித்து வைத்தார்.வைபவத்தில் காத்தான்குடி நகர சபைத்தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பரீனாஸ் வீதி கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் காத்தான்குடி காசிம்போடியார் வீதி மற்றும் றஹ்மா பள்ளி ஆகிய பகுதிகளுக்கான வடிகான் தொகுதிக்கான வேலைகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-


Add new comment

Or log in with...