உயிரிழந்த மாணவிகளின் இறுதிக்கிரியைகளில் பெருந்திரளானோர் | தினகரன்


உயிரிழந்த மாணவிகளின் இறுதிக்கிரியைகளில் பெருந்திரளானோர்

அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த டொரிங்டன் தமிழ் வித்தியாலய மாணவிகளின் இறுதிச் சடங்கு நேற்று பி.ப 02.30 மணியளவில் அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது.

இறுதிசடங்குகள் நேற்று (21) 02.30 மணியளவில் அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன.

கடந்த வியாழக்கிழமை (18) மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்பும்போது பாதுகாப்பற்ற பாலம் ஒன்றினை கடந்து செல்ல முற்பட்டவேளை நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இம்மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...