250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர் | தினகரன்


250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்

நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது. அவர் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட நெல்சன் மண்டேலா பற்றி உலக மக்களுக்குத் தெரியாத பல உண்மைகள் உள்ளன.

இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பாடசாலையின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்தார்.

1994ஆம் ஆண்டு மண்டேலா தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியானதன் முக்கிய நோக்கம், தென்னாபிரிக்காவில் வெள்ளையர்கள் மற்றும் கறுப்பு மக்கள் இடையே ஒரு நல்ல உறவை உண்டாக்கி, நிற வேறுபாட்டை நீக்கி, உலகில் தென்னாபிரிக்காவை சிறப்பான ஓர் நாடாக வெளிக்காட்டத்தான்.

1993 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவுக்கு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.

நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா, உலக நாடுகளால் பல விருதுகளைக் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். இதுவரை நெல்சன் மண்டேலா 250-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலாவின் கைவிரல் ரேகை ஆபிரிக்க கண்டத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டது என்பது வியப்பான தகவல்.


Add new comment

Or log in with...