பொதுத்துறை நிபுணத்துவத்தை வலுவூட்ட சிட்ரா சமூக புத்தாக்க செயலமர்வு | தினகரன்


பொதுத்துறை நிபுணத்துவத்தை வலுவூட்ட சிட்ரா சமூக புத்தாக்க செயலமர்வு

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் போன்று, இலங்கையும் அதிகரிக்கும் நகரமயமாதல், தொழில்நுடப் புத்தாக்கம், ஆழமாகும் சமத்துவமின்மை, அனர்த்தங்களுக்கு பாதிக்கப்படக் கூடிய தன்மை மற்றும் சுற்றுச்சூழல்சார் ஆபத்துக்களை இலங்கை எதிர்கொண்டது. எமது காலத்தின் சவால்களுக்கு இலங்கை வினைத்திறன் மிக்க வகையில் எதிர்வினையாற்றுவதனை உறுதி செய்வதில் ஒரு புதிய தலைமுறை அரசாங்க தலைவர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத அம்சமாகும். 

எமது நாட்டில் சிக்கலான சவால்களுக்கு ஆக்கத்திறன் மிக்க தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான கருவிகளை ஒரு புதிய தலைமுறை பொதுச் சேவை அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம், இந்த தேவைக்கு பிரதிபலிக்கும் வகையில் ‘#NextGenGov விற்பன்னர்களுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் புத்தாக்கம்’ நிகழ்ச்சி உள்ளது.

2018ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பரீட்சார்த்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் 35இற்கும் மேற்பட்ட பொது நிறுவனங்களைச் சேர்ந்த பங்குபற்றுனர்களுடன் இவ் வாரம் மேலும் இரண்டு தொகுதிகளுக்கான இரண்டு இயலுமையை கட்டியெழுப்பும் செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மாலைதீவுகள், பூட்டான் சிம்பாப்வே, சியார்ரா லியோன், துருக்கி, கெம்பியா மற்றும் தான்சானியாவைச் சேர்ந்த சர்வதேச பங்குபற்றுனர்களும் இதில் கலந்து கொண்டனர். 

சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடம், ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக அமைச்சு மற்றும் அபிவிருத்தி நிர்வாகத்திற்கான இலங்கை கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கூடடு; முயற்சி ஒன்றாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் பயன்கள் குறித்து கருத்து வெளியிடட் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான, ரஞ்சித் மத்தும பண்டார், “வினைத்திறன் மிக்க தேசம் ஒன்றிற்கான கொள்கைகளை அமுல்படுத்துவதில் ஒரு முக்கிய தொகுதியாக உறுதியான மற்றும் பயனுறுதி மிக்க பொது சேவையின் பங்களிப்பு உள்ளது.

பொது துறை உயர்திறன்களுக்கான தொலைநோக்கு மற்றும் புத்தாக்கம்’ தொடர்பான ஒரு முழுமையான நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடம் மற்றும் ஜனாதிபதி செயலகம் மற்றும் அபிவிருத்தி நிர்வாகத்திற்கான இலங்கை கல்வி நிறுவனத்துடன் பணியாற்றுவதில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மகிழ்ச்சி கொள்கின்றது. வெற்றிகரமான பரீட்சார்த்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாகசெயலமர்வு முன்னெடுக்கப்படுகிறது பொது துறையின் வினைத்திறனை மேம்படுத்துவதனைச் சார்ந்து உரையாடல்களில் இருந்து, புத்தாக்கமான வழி ஒன்றில் சவால்களை அணுகுவதற்குத் தேவையான கருவிகளை தெரிவு செய்யப்படட் அதிகாரிகளுக்கு இக்கருவி வழங்குகின்றது. சிட்ராவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், இலங்கையின் பொதுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.  

நிகழ்ச்சி குறித்து கருத்து வெளியிடட் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர், கௌரவ சுஜீவ சேனசிங்க “எந்தவொரு அரசாங்கத்தினதும் முதுகெலும்பாக பொது துறை அதிகாரிகள் உள்ளனர். நாடுகள், தாம் நிர்ணயிக்கும் இலக்குகளை எட்டுவதனை உறுதி செய்வதில் அவை முக்கிய பங்கினை ஆற்றுகின்றன.

இவ்வருடம் #NextGenGov நிகழ்ச்சியில் பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த 55இற்கும் மேற்பட்ட பொதுத் துறை அதிகாரிகளையும் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த பொதுத் துறை அதிகாரிகளையும் வரவேற்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்” என்றார்.   

 


Add new comment

Or log in with...