தபால் சேவைகள் வழமைக்கு | தினகரன்


தபால் சேவைகள் வழமைக்கு

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு நாட்களாக  முன்னெடுத்து வந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, வழக்கம் போன்று  தபால் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தங்களது 5 கோரிக்கைகளுக்கும் தீர்வு பெற்றுத் தருவதாக எழுத்து மூலமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடிதங்கள் மற்றும் சுமார்  200,000 பார்சல்களை நேற்றிரவு (18) தபால் ரயில் சேவை மூலம் வெளி மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெளி மாகாண தபால் நிலையங்களில் குவிந்த கடிதங்கள் மற்றும் சுமார் 15 இலட்சம் பொதிகளை  இன்று காலை முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கட்டுநாயக்க விமான நிலைய அஞ்சல் நிலைய பிரிவில் குவிந்துள்ள வெளிநாட்டு பொதிகளை, இரண்டு லொறிகளில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கொண்டு வந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...