அலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை | தினகரன்


அலோசியஸ் உட்பட 8 பேருக்கு பிணை

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் சம்பந்தமான வழக்கின் பிரதிவாதிகள் 08 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (19) விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ராஜரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

இவ்வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை.  

இதனை தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிரதிவாதிகள் 08 பேருக்கும் குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் ரூ. 10 இலட்சம் கொண்ட ரொக்கப் பிணை மற்றும் ரூ. 25 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

 


Add new comment

Or log in with...