Friday, July 19, 2019 - 1:28pm
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர் புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்று (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயிற்றுவலி,வயிற்றுக் கடுப்பு, வாந்திபேதி ஆகிய அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர்-அப்துல்சலாம் யாசீம்)
Add new comment