மொரட்டுவையில் விபத்து; 8 பேர் காயம் | தினகரன்

மொரட்டுவையில் விபத்து; 8 பேர் காயம்

மொரட்டுவையில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – காலி வீதியில் கட்டுவாத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, பிலியந்தலை  நோக்கி திரும்ப முற்பட்ட வேளையில், காலி நோக்கி பயணித்த மற்றுமொரு வேனுடன் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.  

இதன்போது, குறித்த வேன் அருகிலிருந்த உணவகத்துடன் மோதியுள்ளது.  இவ்விபத்தினால் குறித்த உணவகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் வேன் சாரதிகள் இருவர் உட்பட 08 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் குறித்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களும் உணவக ஊழியர்களும் அடங்குவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Add new comment

Or log in with...