சீரற்ற காலநிலையால் சில இடங்களில் மின் தடை | தினகரன்


சீரற்ற காலநிலையால் சில இடங்களில் மின் தடை

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றையதினம் (18) நாட்டின் சில பாகங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருந்ததாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் அபிவிருத்தி பணிப்பாளருமான சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மழையுடனான காலநிலை மற்றும் காற்றுடனான நிலைமை காரணமாகவே மின்தடை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாரியளவில் மின்தடை ஏற்படவில்லை எனவும், சில இடங்களில் மின்கம்பிகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலேயே மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

எதிர்பாராத வகையில் பெய்யும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமை காரணமாக மின்விநியோகத்தில் தடை ஏற்படுவது சாத்தியமாகும். எனினும், மின்விநியோகத்தை உடனடியாக வழமைக்கு கொண்டு வரும் வகையில் பல அவசர சேவை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...