அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தவர்களில் 200 பேர் நெரிசலில் மயக்கமுற்றனர் | தினகரன்


அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தவர்களில் 200 பேர் நெரிசலில் மயக்கமுற்றனர்

அத்திவரதர் திருவிழா தொடங்கி 18 ஆவது நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் பக்தர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளியபடி சென்றனர். அதனால், முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் அதிகமானோர் மயங்கினர். அவர்களுக்கு கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல, அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் செல்வதால், காஞ்சிபுரம் - வாலாஜா சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து காவலர்கள் இல்லாததால், தாம்பரம், செங்கல் பட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைய முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.


Add new comment

Or log in with...