Thursday, March 28, 2024
Home » வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் அவ்வப்போது மழை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் அவ்வப்போது மழை

- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

by Rizwan Segu Mohideen
January 19, 2024 7:53 am 0 comment

– சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (19) இலங்கையின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்திணம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT