Thursday, March 28, 2024
Home » தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் மருந்து உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணம்
அநுராதபுரம் ஓயாமடுவ பகுதி 85 ஏக்கரில்

தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் மருந்து உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணம்

by sachintha
January 19, 2024 7:02 am 0 comment

அடிக்கல் நாட்டு விழாவில் மாகாண ஆளுநர்கள் பங்கேற்பு

அநுராதபுரம் ஓயாமடுவ பகுதியில் ‘லைப் பபோ டெக்’ தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரின் இணைத்தலைமையில் கடந்த (12) நடைபெற்றது.

சகல வசதிகளையும் கொண்ட 21 மருந்து தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஓயாமடுவ தேசத்திற்கு மகுடம் பகுதியில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் இந்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் நேரடியாக 2000 தொழில் வாய்ப்புகளும் மறைமுகமாக 5000 தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவிருக்கின்றன. தற்போது நாட்டிற்கு மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்காக 120 மில்லியன் நிதியினை அரசு செலவிட்டு வருவதுடன் இலங்கையில் 20 வீதமான மருந்து வகையே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலவசமாக 80 வீதம் மருந்து வகையினை உற்பத்தி செய்ய முடியும். இதில் 20 வீதம் ஏற்றுமதி செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனூடாக கூடுதலான வெளிநாட்டு முதலீட்டினை நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்கும் எதிர்ப்பாக்கப்பட்டுள்ளது.

 

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT