Friday, April 19, 2024
Home » சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்
உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பு ஊடாக

சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்

by sachintha
January 19, 2024 6:13 am 0 comment

அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதனூடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது

இக்கலந்துரையாடலில் சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும், வங்கிகள் ஊடாக கடன் வசதிகளை பெற முற்படும் போது ஏற்படும் இறுக்கமான நடைமுறைகளால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். இச்சுயதொழில் முயற்சியாளர்களின் கருத்துகளில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT