Friday, April 26, 2024
Home » சம்பியனானது ஓரியன்ஸ்

சம்பியனானது ஓரியன்ஸ்

by sachintha
January 19, 2024 12:02 pm 0 comment

பண்டாரபொத்தான வளர்பிறை விளையாட்டுக்கழகம் நடாத்திய லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கெகிராவ ஓரியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

பண்டாரபொத்தான பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற லீக் முறையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் கலாவெவ டப்ளியூ.எஸ்.சீ. அணியை எதிர்கொண்ட ஓரியன்ஸ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

தொடர் நாயகன் விருதை கெகிராவ ஒரியன்ஸ் அணியின் காவிந்த வென்றதோடு இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக கெகிராவ ஒரியன்ஸ் அணியின் சாகீர் தெரிவு செய்யப்பட்டார்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT