டிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன் | தினகரன்


டிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்

பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ​ேஜான்சன், பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கும் பிரிவைச் சேர்ந்த ஜோன்சன், இதற்கு அமெரிக்காவின் உதவியும் ஆதரவும் முக்கியம் என்று தெரிவித்தார். அமெரிக்காவுடன் நல்லவிதமான ஒப்பந்தங்களில் பிரிட்டன் இணைந்தால் மற்ற நாடுகளும் முன்வந்து பிரிட்டனுடன் ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோன்சன் கருதுவதாக லண்டனின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவேண்டும். அதற்குள் அமெரிக்காவுக்குச் சென்று ஒப்பந்தத்தில் இணைய ஜோன்சன் தயாராக இருப்பதாக ‘த டைம்ஸ்’ கூறியது.


Add new comment

Or log in with...