வெற்றி தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது | தினகரன்


வெற்றி தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான இறுதிப் போட்டியில், சுப்பர் ஓவரிலும் ஆட்டம் சமனிலையில் முடிந்ததால், அதிக பௌண்டரி அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி சம்பியனானது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று 2ஆவது இடம் பிடித்திருந்த நியூசிலாந்து அணி, இந்த முறையும் கடுமையாகப் போராடி 2ஆவது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடனான தோல்விக்கு போட்டி விதிமுறைகளையும், குறைவான பௌண்டரி எல்லைகள் வழங்கப்பட்டதையும், பென் ஸ்டோக்ஸின் துடுப்பு மட்டையில் பந்து பட்டு பௌண்டரிக்கு சென்றதும் தனது அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து கேன் வில்லியம்சன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”இப் போட்டியில் எங்களுக்கு எதிராக நிறைய விடயங்கள் நடைபெற்று விட்டன. இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியான அணி தான். இந்தப் போட்டி மிகவும் சவாலானது. ஆடுகளத்தின் தன்மையும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. எங்கள் வீரர்கள் இறுதி வரை கடுமையாக போராடினர். இருந்தாலும் இது எங்களுக்கான நாள் கிடையாது” என்றார்.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது தொடரில் வில்லியம்சன் பதலளிக்கையில், ”நாங்கள் காநிலை மற்றும் ஆடுகள நிலைமைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தோம் (என்ன செய்வது என்று தீர்மானிக்கும் போது). உலர்ந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடினால் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியும் என கருதினோம்.

மேலும் 10 அல்லது 20 ஓட்டங்களை மேலதிகமாக குவிக்கலாம் என நாங்கள் விரும்பியிருப்போம். ஆனால் ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இது ஒரு போட்டித் தன்மை மிக்க ஓட்ட எண்ணிக்கையாகும். பந்து வீச்சாளர்கள் உண்மையில் துடுப்பாட்ட வீரர்களை ஒரு கடினமான அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்” என தெரிவித்தார்.

”இது நிச்சயமாக அதிக ஓட்டங்களைக் குவிக்கின்ற ஆடுகளம் அல்ல. எனினும், அருமையான போட்டியைக் கொடுத்த இங்கிலாந்துக்கு வாழ்த்துக்கள் இது சவாலானது, ஆடுகளங்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று வித்தியாசமாக இருந்தன. 300-க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பற்றி நிறைய பேசுகிறோம், ஆனால் அவற்றில் பலவற்றை இங்கிலாந்தில் நாங்கள் பார்த்ததில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியின் 50ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஓடி வந்தபோது, அவரின் துடுப்பு மட்டையில் பந்து பட்டு பௌண்டரிக்குச் சென்றது. இதனால் 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் விதிதான் என்றாலும், போட்டியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக இருந்தமை அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

இதில் கேள்வி என்னவெனில், ஸ்டம்புக்கு வந்த பந்தை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ துடுப்பாட்ட வீரரொருவர் தடுக்கும்போது அது ஆட்டமிழப்பை தடுப்பதற்கு சமம், அந்தவகையில் ஸ்டோக்ஸ் ஓடி வந்த விதம் தவறாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கேன் வில்லியம்சன் கருத்து வெளியிடுகையில், ”எங்களுக்கும் நிறைய நேர்மறைகள் உள்ளன. போட்டியின் இறுதி ஓவரில் பந்து பென் ஸ்டோக்ஸின் துடுப்பு மட்டையில் அடித்தது வெட்கக்கேடானது, ஆனால் இதுபோன்ற தருணங்களில் மீண்டும் இவ்வாறு நடக்கக்கூடாது என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகள் உள்ளன. ஆனால் இன்றை போட்டியைப் பார்க்கும் போது அப்படி இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுந்தது.

நிச்சயமாக போட்டிக்குச் செல்லும் போது அவற்றை நீங்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம். அதேபோல, நாங்கள் கூடுதலாக ஒரு எல்லையைக் கொண்டிருக்கலாம், பின்னர் அதை வெல்வதற்கு இரண்டு முயற்சிகளை மேற்கொண்டால், நாங்கள் அந்தக் கோட்டைக் கடந்து செல்வோம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கூட அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் சற்று பின்னால் இருந்தோம்.

இந்த நிலைக்கு எங்களை அழைத்துச் செல்ல எமது வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆனால் இந்தப் போட்டி முழுவதும் அவ்வாறு விளையாடவில்லை. எமது வீரர்கள் முக்கியமான தருணங்களில் சோர்வடைந்து போகிறார்கள். இது உண்மையில் பின்னடைவை கொடுக்கும். ஆனால் எமது வீரர்களின் முயற்சி அற்புதமானது” என்றார்.

இந்தப் போட்டியில் சுப்பர் ஓவரை எதிர்கொள்ள வந்த ஜிம்மி நீஷம் – மார்டின் கப்டிலின் ஆட்டம் மற்றும் அப்போதைய தன்மைகள் குறித்து வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில்,

”அவர்கள் (நீஷம் மற்றும் கப்டில்) இருவரும் பந்தை மிகவும் வேகமாக அடித்தனர். இடதுகை, வலதுகை சேர்க்கை சுப்பர் ஓவரில் பயனுள்ளதாக இருந்தது. இதுபோன்ற சிறிய பௌண்டரி எல்லைகளுடன் விளையாடி ஒரு போட்டியை விமர்சிப்பது நியாயமற்றது. குறிப்பாக இன்று நாங்கள் பார்த்த போட்டியைக் குறிப்பிடலாம்” என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...