உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு | தினகரன்


உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு

நியூசிலாந்துக்கு ரூ.35 கோடி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75கோடி பரிசாக வழங்கப்பட்டது.

சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் அதிக பவுண்டரி அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கலாம் என்ற விதி இருக்கிறது. இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகளை (சிக்சர் உட்பட) அடித்து இருந்ததால் உலக கிண்ணத்தை கைப்பற்றியது. அந்த அணி முதல் முறையாக உலக சம்பியன் பட்டத்தை பெற்றது.

இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. பவுண்டரிகள் அதிகமாக விளாசியதின் அடிப்படையில் இங்கிலாந்து உலக கிண்ணத்தை வென்றது. சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.35கோடி கிடைத்தது. ஆட்ட நாயகன் விருது பென்ஸ்டோக்சுக்கும், தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கும் கிடைத்தது.

 


Add new comment

Or log in with...