48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள் | தினகரன்

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்-Central Mail Exchange Staff on 48Hr Token Strike

கொழும்பு, மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) பிற்பகல் 4.00 மணி முதல், சேவையிலிருந்து விலகி பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்-Central Mail Exchange Staff on 48Hr Token Strike

கடந்தவருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்தான அமைச்சரவை அனுமதி இதுவரை வழங்கப்படவில்லையென்பதால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் குதித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்-Central Mail Exchange Staff on 48Hr Token Strike

இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

அரசாங்கம் தமது 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் செவிசாய்க்காவிடின் பிறிதொருநாளில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கும் தயாராகவுள்ளதாக ஒன்றிணைந்ததபால் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்-Central Mail Exchange Staff on 48Hr Token Strike

48 மணி நேர பகிஷ்கரிப்பில் மத்திய தபால் பரிமாற்ற ஊழியர்கள்-Central Mail Exchange Staff on 48Hr Token Strike

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

Add new comment

Or log in with...