ஈழத் தமிழர் பிரச்சினையில் சிதம்பரம் என்ன செய்தார்? | தினகரன்


ஈழத் தமிழர் பிரச்சினையில் சிதம்பரம் என்ன செய்தார்?

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

ஈழத் தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து அவர், பேசியதாவது,

பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் சேர்க்கை விரைவாக நடைபெறுகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்பட உள்ளது.

நாடு முழுதும் நதிநீர் பிரச்சினை கள் உள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலையில் உள்ளன. 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். தமிழக அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது பல பேரின் தோல் உரிக்கப்படும்.

தமிழகத்தில் மொழி கொள்கை என்பது ஒன்றும் இல்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா? மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றார்.

 


Add new comment

Or log in with...