பிரான்ஸ் விண்வெளி இராணுவம் அமைப்பு | தினகரன்


பிரான்ஸ் விண்வெளி இராணுவம் அமைப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் புதிய விண்வெளி இராணுவப் பிரிவை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் விமானப் படையின் ஓர் அங்கமாக அது செயல்படவுள்ளது.

பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதி மெக்ரோன் அந்தத் தகவலை வெளியிட்டார்.

தேசியப் பாதுகாப்பு நலனில் அக்கறை செலுத்தும் விதமாக விண்வெளி இராணுவப் பிரிவு அடுத்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அத்தகைய திட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மையில், சீனாவும் ரஷ்யாவும் விண்வெளி தொடர்பான கவனத்தையும், செலவையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...