மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் | தினகரன்


மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

சரண் இயக்கத்தில் நடிகை ராதிகா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ், காவ்யா தாபர் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் ஆரவுக்கு அம்மாவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார் நடிகை ராதிகா. மேலும் தனது அப்பா எம்.ஆர். ராதா போன்று பேசி நடிக்கிறாராம். படத்தில் நடிகர் ஆரவ் ரயில்வே கான்டிராக்டராகவும் நடிக்கிறாராம். இந்தப் படத்தை இயக்குனர் சரண் இயக்கி வருகிறார்.

இயக்குனர் சரண் ஏற்கெனவே அஜித்தை வைத்து ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்‘, நடிகர் விக்ரமை வைத்து ‘ஜெமினி’ மற்றும் கமல்ஹாசனை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய கேங்ஸ்டர் படங்களை எடுத்து ஹிட் கொடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...