வவுனியாவில் 10 வீடுகள் காற்றினால் சேதம் | தினகரன்


வவுனியாவில் 10 வீடுகள் காற்றினால் சேதம்

வவுனியாவில் வீசிய கடும் காற்று காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக,  அம்மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று (12) மாலை கடும் காற்று வீசியது.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  பம்பைமடு பகுதியில் 05 வீடுகளும், மாளிகைப் பகுதியில் ஒரு வீடும், ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் 03 வீடுகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரம்பமடு பகுதியில் ஒரு வீடும்  சேதமடைந்துள்ளன. இதனால் 10குடும்பங்களைச் சேர்ந்த 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் காரணமாக தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைப்பகுதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வவுனியா விசேட நிருபர் - கே.வசந்தரூபன்)


Add new comment

Or log in with...