Thursday, March 28, 2024
Home » 198 குடும்பங்களுக்கு இலவசமாக பால்மா பைக்கற்றுகள்

198 குடும்பங்களுக்கு இலவசமாக பால்மா பைக்கற்றுகள்

by Prashahini
January 18, 2024 10:59 am 0 comment

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 42 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட சிறுபிள்ளைகளைக்கொண்ட198 குடும்பங்களுக்கு இலவசமாக பால்மா பைக்கற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று (18) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து இதைனை வழங்கி வைத்தார்

பொண்டேரா நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 400 கிராம் நிறைகொண்ட அங்கர் வகைப் பால்மா பைக்கற்றுக்கள் குடும்பம் ஒன்றிற்கு இரண்டு பைக்கற்றுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வில் இதுபற்றி கருத்துத்தெரிவித்த பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், இப்பால்மா உங்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்படுகின்றன. இதனை நீங்கள் விற்பனை செய்யாது நீங்களே பயன்படுத்திக்கொள்ளுமாறும் இதன்போது மக்களிடம் அன்பாக கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

தோப்பூர் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT