"யாதும் ஊரே" தொழில் முனைவோருக்கான இணையத்தளம் உருவாக்கம் | தினகரன்

"யாதும் ஊரே" தொழில் முனைவோருக்கான இணையத்தளம் உருவாக்கம்

முதலீடுகளை ஈர்க்க 60 லட்சம் ரூபா செலவில் "யாதும் ஊரே" என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபையில் விதி எண்110 -ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் போதே இதனை குறிப்பிட்டார்.

அதில் அவர் கூறுகையில்,

முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும். தொழில் வளர் தமிழகம் என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் அமைக்கப்படும்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பூங்காக்களில் 50 கோடி ரூபா மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்படும். தூத்துக்குடியில் 634 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தூத்துக்குடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட ஆலை அமைக்கப்படும். காஞ்சீபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 26 கோடி ரூபாயில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட கால, குறுகிய கால புதிய தொழில் பிரிவுகள் துவங்கப்படும். கோவையில் 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றார்.


Add new comment

Or log in with...