கர்நாடக பேரவை உச்ச நீதிமன்றின் அதிகாரத்துக்கு சவாலா? | தினகரன்

கர்நாடக பேரவை உச்ச நீதிமன்றின் அதிகாரத்துக்கு சவாலா?

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு கர்நாடக பேரவைத் தலைவர் சவால் விட முயற்சிக்கிறாரா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சபாநாயகர் கருதுகிறாரா என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் இராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த சட்டத்தரணியுமான அபிஷேக் மனு சிங்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எம்.எல்.ஏ.க்களின் இராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்றும், அவைத் தலைவருக்கு நீதிமன்றங்கள் அறிவுறத்த முடியாது என்றம் கூறப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.


Add new comment

Or log in with...