காங்கிரசிலிருந்து விலகிய பத்து எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க வில் இணைவு | தினகரன்

காங்கிரசிலிருந்து விலகிய பத்து எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க வில் இணைவு

கோவாவில் காங்கிரசில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சமீபத்தில் பதவி விலகினர்.

அவர்கள் அனைவரையும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் முறைப்படி பா.ஜ.க.வில் இணைந்தனர்.

தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததன் மூலம், கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க.வின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. எனவே, நீண்ட காலம் கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசின் பலம் தற்போது 5 ஆக குறைந்துள்ளது.

புதிதாக இணைந்துள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...