கிழக்கு மாகாண அணியாக ஹொக்கி லயன்ஸ் பங்கேற்பு | தினகரன்


கிழக்கு மாகாண அணியாக ஹொக்கி லயன்ஸ் பங்கேற்பு

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்திணைக்களம் நடாத்தும் வருடாந்த தேசிய மட்ட ஹொக்கி விளையாட்டுப்போட்டி இன்று (12) வெள்ளிக்கிழமை கொழும்பு ரொறிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலிருந்து ஒன்பது ஹொக்கி அணிகள் பங்கேற்கின்றன.

இன்றும் நாளையும் ரொறிங்ரனில் நடைபெறவுள்ள போட்டியின் முதல்போட்டியில் கிழக்குமாகாண அணியும் தென்மாகாண அணியும் மோதவுள்ளன.

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவான அம்பாறை மாவட்ட ஹொக்கி அணி கிழக்கு மாகாணம் சார்பில் போட்டியிடவுள்ளது. கிழக்குமாகாண அணித்தலைவர் கனகசுந்தரம் சசிகாந்த் தலைமையிலான அணியில் கழகத்தலைவர் த.லவன் உள்ளிட்ட காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழக முன்னணி வீரர்களே களமிறங்குகின்றனர்.

ஹொக்கி லயன்ஸ் கழகத்தலைவர் தவராஜா லவன் தலைமையில் சிறப்பாக இயங்கிவரும் இவ்வணியினர் மூன்றாவது தடவையாக தேசியமட்டப் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...