சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது | தினகரன்


சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது

பொகவந்தலாவை, டின்சின் மேல் பிரிவு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இன்று (12) அதிகாலை இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல்அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவையை சேர்ந்த 29, 33, 47, 60 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

(ஹட்டன் விசேட நிருபர்- கே.சுந்தரலிங்கம்)

 


Add new comment

Or log in with...