பண மோசடி செய்த பங்களாதேஷ் பிரஜை கைது | தினகரன்

பண மோசடி செய்த பங்களாதேஷ் பிரஜை கைது

இருபது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், நாரம்மல நகரில் வைத்து நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊழல் விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

54 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (12) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...