இந்திய மீனவர்கள் 6 பேர் கைது | தினகரன்

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 06 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வழமையான ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தபோதே, குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (11) கைதுசெய்யப்பட்டனர்.

62, 48, 39, 27, 22, 12 ஆகிய வயதுகளையுடைய இந்திய மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.  

கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.  

 


Add new comment

Or log in with...