வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர் | தினகரன்

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர்

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரேரணைக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (11) அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.

 1. டக்ளஸ் தேவானந்தா
 2. சிவசக்தி ஆனந்தன்
 3. வீ.இராதகிருஷ்ணன்
 4. உதய கம்மன்பில
 5. விஜேதாஸ ராஜபக்‌ஷ
 6. துமிந்த திஸாநாயக்க
 7. எஸ்.பி. நாவின்ன
 8. மஹிந்த சமரசிங்க
 9. துனேஷ் கங்கந்த
 10. அசோக்க பிரியந்த
 11. மொஹான் லால் கிரேரு
 12. சந்திரசிறி கஜதீர
 13. சரத் சந்திரசிறி முத்துக்குமாரன ஆகியோர் வாக்கெடுப்பின்போது கலந்துகொள்ளவில்லை.

எதிரணியிலுள்ள ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருந்தனர்.


Add new comment

Or log in with...