நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு | தினகரன்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் புதிதாக கட்டப்பட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறுமென, நுவரெலியா பொது வைத்தியசாலையின்  பணிப்பாளர்  டபிள்யூ.ஆர்.எம். மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

600 படுக்கை வசதிகள் கொண்ட வார்ட், நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட  சத்திரசிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் 7 பில்லியன் ரூபா நிதியுதவியில் குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Add new comment

Or log in with...